
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான வாலிபரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாசிங் மற்றும் போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 7 பார்சல் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தேமுடு (36) என்பதும் சேலத்திற்கு கஞ்சா கொண்டு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தார்? சேலத்தில் யாரிடம் கொடுப்பதற்கு கஞ்சாவை கொண்டு செல்கிறார்? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.