என் மலர்

  செய்திகள்

  மின்சாரம் தாக்குதல்
  X
  மின்சாரம் தாக்குதல்

  வத்தலக்குண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வத்தலக்குண்டு:

  வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. வெங்கிடாஸ்திரி கோட்டை தெற்குத் தெரு காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மனைவி கார்த்திகா (வயது 28) என்பவர் தனது வீட்டில் ஸ்விட்சை போட முயன்றார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள பிச்சை மனைவி பாண்டியம்மாள் (வயது 40) அவரை காப்பாற்ற முயன்றார்.

  இதில் அவரது உடல் மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த 2 பேரையும் ஆட்டோவில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் உயிரிழந்தார்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திகா தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×