search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி பணியாளர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி பணியாளர்கள்

    திருவாரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கேசவன், மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணிவரன்முறை செய்திட வேண்டும். விற்பனையாளர்களுக்கு கடந்த மாத விற்பனை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதை மாற்றம் செய்து குடும்ப அட்டைகளின் தேவை அடிப்படையில் 100 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்ய நிர்ப்பந்திக்க கூடாது. 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அங்காடிகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்்ப்பாட்டம் நடந்தது.

    இதில் சங்கத்தின் போராட்டக்குழு தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஜெயராமன், வட்ட நிர்வாகிகள் சீனுவாசன், தமிழரசன், பாலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நியாய விலைக்கடைகளில் பெண் பணியாளர்கள் பணி புரிவதை கருத்தில் கொண்டு கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் அங்காடிகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை சரிபார்க்க ஒவ்வொரு அங்காடிகளிலும் எடை தராசு வழங்கப்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 
    Next Story
    ×