என் மலர்

  செய்திகள்

  ஜெயில் (கோப்பு படம்)
  X
  ஜெயில் (கோப்பு படம்)

  மனைவி மீது சந்தேகத்தால் வீட்டுக்கு தீவைப்பு - டிரைவர் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மனைவி மீது சந்தேகத்தால் வீட்டுக்கு தீ வைத்த ரிக் வண்டி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மகள் இந்திரா (வயது 38). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

  ராஜேந்திரன் ரிக் வண்டி டிரைவராக உள்ளார். இதனால் அவர் அடிக்கடி ரிக் வண்டி வாடகைக்கு வெளியூர் சென்று விடுவது வழக்கம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வந்து செல்வார்.

  இந்த நிலையில் தன் மனைவி இந்திரா மீது ராஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

  நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் ராஜேந்திரன் கூடமலையில் உள்ள மனைவி இந்திரா வீட்டிற்கு தீ வைத்தார். இதை இந்திராவின் தாயார் அங்காயி பார்த்து கூச்சலிட்டார். அப்போது தீ மளமளவென பரவியது.

  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இந்திரா மற்றும் 2 குழந்தைகள் அலறியடித்தபடி வெளியே வந்தனர். பின்னர் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து வீட்டிற்குள் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

  இது குறித்த தகவலின் பேரில் கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

  தனது மருமகன் மீது அங்காயி கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
  Next Story
  ×