என் மலர்

  செய்திகள்

  வெடி விபத்து
  X
  வெடி விபத்து

  பெரம்பலூர் அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே கல் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
  குன்னம்:

  பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில், எளம்பலூர் இந்திராநகரை சேர்ந்த வீராசாமி (வயது 51) அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தினேஷ் (22) ஆகியோர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, கல் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்த போது, சிதறி விழுந்த பாறாங்கற்கள் 2பேர் மீதும் விழுந்தது. இதில் வீராசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×