
கோவை:
கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது.கடந்த 7-ந் தேதி கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சங்கீதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் கணவர் வீடு திரும்பினார்.இந்த நிலையில் நேற்று சங்கீதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.