
பாராளுமன்ற மேல்- சபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. சார்பில் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.


மனு தாக்கலின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.