search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கலில் வைகோ பேட்டியளித்த போது எடுத்த படம்.
    X
    திண்டுக்கலில் வைகோ பேட்டியளித்த போது எடுத்த படம்.

    எனக்கு பதில் இளங்கோ மாற்று வேட்பாளர்- வைகோ தகவல்

    மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ள இளங்கோ, தனக்கு பதில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், திமுக சார்பில் மற்றொரு வேட்பாளரான என்.ஆர்.இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் மாற்று வேட்பாளராக இளங்கோவை களமிறக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது. அதேசமயம், போட்டியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

    இதுபோன்ற தகவல் பரவிய நிலையில், இந்த விவகாரத்திற்கு வைகோ முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டோம். அப்போது நான் மாநிலங்களவை உறுப்பினர் அக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினார். நான் போட்டியிடுவதாக இருந்தால் சீட் ஒதுக்கி தருவதாக கூறினார். அந்த அடிப்படையில், ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    என்ஆர் இளங்கோ

    ஆனால், தேசத் துரோக வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி நான் தான் கூறினேன். அதன்படி, என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் ஆஜராக செல்வதால் நாளை வேட்பு மனு பரிசீலனைக்கு நான் செல்ல மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×