search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் ஆம்னி பஸ்
    X
    விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் ஆம்னி பஸ்

    திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ மாணவி பலி

    திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் மருத்துவ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைரோடு:

    எர்ணாகுளத்தில் இருந்து மதுரையை நோக்கி தனியார் ஆம்னி பஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. பஸ்சை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு டோல்கேட் மையத்துக்கு முன்பாக கொழிஞ்சிப்பட்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு பஸ் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த பஸ் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பலகை மீது பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கூச்சலிட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வைக்கப்பட்டனர்.

    இடி பாடுகளுக்குள் சிக்கி கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த மரிய ஜோஸ் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு எம்.டி. உயர் படிப்பு படித்து வந்தார். வார விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இன்று கல்லூரிக்கு வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த தேவி (20), எர்ணாகுளத்தைச் சேர்ந்த கென்னி மூன் (37), டெயசிங் சாய் (36), ஜாஸ் கந்த் (35), சுதிர பாபு (45), பிசித் (44), டிரைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×