search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் நிறுத்தம்
    X
    சிறுமி திருமணம் நிறுத்தம்

    கோவையில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    கோவை அருகே இன்று நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை செம்மேடு அருகே உள்ள முத்துவயலை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், நேருநகரை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பிரகாஷ் (28) என்பவருக்கும் இன்று காலை திருமணம் செய்வது என பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக மணமக்களின் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதன்படி நேற்று மாலை முதல் செல்வபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. மேலும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி இரவு 9 மணியவில் நடந்து கொண்டு இருந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவீட்டாரின் உறவினர் திருமண மண்டபத்தில் வந்து குவிந்து இருந்தனர்.

    இந்தநிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக செல்வபுரம் கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜூக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அவர் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் உறவினர்களிடம் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது எனவும், மணப்பெண்ணுக்கு 18 வயது தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது என கூறி இன்று காலை 6 மணிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

    திருமணம் நின்று போனதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    Next Story
    ×