search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி
    X
    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி

    தண்ணீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - திருவண்ணாமலை கலெக்டர்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிமராமத்து திட்டப் பணிகள் 2019-2020-ம் ஆண்டு மூன்றாம் கட்டமாக ரூ.16.07 கோடி மதிப்பில் 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் புனரமைப்பது தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி, தலைமையில் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆய்வுக்குழு தலைவர் தலைமையில் 5 தொழில்நுட்ப உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 37 ஏரிகள், அணைக்கட்டுகள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது, இதன் மூலம் 12,213 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனை எப்படி பயன் உள்ளதாக செயல் படுத்தலாம் என்பதற்காக இந்த கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

    கிராமங்கள் உள்ள ஏரி, குளங்களின் நீரினை சேமிப்பது மிகவும் அவசியம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப் பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) கீழ் 697 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 1257 ஏரி, குளங்களும் உள்ளன.

    மேலும், சாத்தனூர், குப்பநத்தம், மிருகண்டா, செண்பகத்தோப்பு ஆகிய 4 ஆணைகள் உள்ளன, இந்த அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.

    இன்றைய நிலையில் தண்ணீர் தேவையில் ஆபத்தான நிலையில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகளவு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 57 பிர்காவில், 42 பிர்காக்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தான் இன்று மத்திய குழுவினர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், திறந்தவெளி கிணறுகள், மழைநீர் சேமிப்புகள் உட்பட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியதை நாம் அழித்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய வருங்கால சந்ததியனருக்கு வாழக்கூடிய சூழ்நிலை இருக்காது. பணம், பொருள் சேர்ப்பதது தற்போது முக்கியம் இல்லை, தண்ணீரை சேமிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறார்கள். தண்ணீர் உற்பத்திக்கும், பாதுகாக்கவும் உங்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×