search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கூடலூரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை- 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது

    கூடலூர் மற்றும் சுற்றுப் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கூடலூர்:

    கூடலூர் மற்றும் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் வாங்கி சிலர் கடைகளில் வைத்து சில்லறை விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் காயத்திரி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் முகுந்தன் உட்பட போலீசார்கள் நேற்று கூடலூர் பகுதியிலுள்ள கோழிக்கடைகள், பழைய பஸ்டாண்டு பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் முருகன் என்ற குருவி மண்டையன், அறிவழகன், தெய்வேந்திரன், சின்னன், முருகன், ராஜேந்திரன் மற்றும் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள், இந்திராணி ஆகிய எட்டு பேரும் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அனுமதியின்றி மதுவிற்பனை செய்த எட்டுபேர்களை கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து 115 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்த போது புதிய பஸ்நிலையம் அரசமர தெருவைச் சேர்ந்த திருமாறன் (வயது 48) என்பவர் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் கூடலூர் குமுளி தேசிய நெடுஞ்சாலை தனியார் தொடக்கப்பள்ளி அருகே காஞ்சிமரத்துறை பகுதியைச் சேர்ந்த முத்தையா (வயது 35) என்பவர் சில்லரையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×