search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகம்
    X
    தலைமைச் செயலகம்

    10 சதவீத இடஒதுக்கீடு: சென்னையில் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ம் தேதி மாலை 5.30 மணியளவில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஆலோசிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×