search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    ஆத்தூர் ஒன்றிய பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி

    ஆத்தூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் மின் தடையினால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளும் சித்தையங்கோட்டை, அய்யம்பாளையம், சின்னாளப்பட்டி உட்பட 3 பேருராட்சிகளும் உள்ளன. இப்பகுதியில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் ஊராட்சி செயலர் மற்றும் பேருராட்சி செயல் அலுவலர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள். ஊருக்குள் சாக்கடைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது ஒருபுறமிருக்க மின்சார வாரியம் காலை முதல் இரவு வரை அறிவிக்காமல் மின் தடை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அனைத்து ஒன்றியத்திலும் மாதத்திற்கு ஒரு முறை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்பட்டு மின்சாரம் தடை செய்வது வழக்கம். ஆனால் ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டி துணை மின் நிலையத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது உள்ளாட்சிக்கு பிரதிநிதிகள் இல்லாததால் ஊருக்குள் ஆங்காங்கே சாக்கடைகள் தேங்கி பல்வித தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனிடையே மாதத்திற்கு ஒரு முறை மேல் அறிவிக்கப்பட்ட மின் தடை அவதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மின்தடையே இல்லை என அதிகாரிகள் கூறி வரும் நிலையில் ஆத்தூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை இயல்பு வாழ்க்கையை பாதிக்க செய்கிறது. எனவே மின்சார வாரிய நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் வினியோகத்தை சரி செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×