search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம்

    தமிழக முதல் அமைச்சர்-துணை முதல் அமைச்சர் நாளை தென்காசி வருகை

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தென்காசியில் நடைபெறும் இணைப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
    தென்காசி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து பலர் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இருந்து கழக அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 10 ஆயிரம் தொண்டர்கள் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் நாளை (6-ந்தேதி) மாலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் இணைகிறார்கள்.

    இதற்காக நாளை பிற்பகல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு மாலை வருகிறார்கள். இங்கிருந்து கார் மூலம் நெல்லை வழியாக தென்காசி செல்கிறார்கள்.

    பாளை மார்க்கெட் ஜவகர் திடலில் மதியம் 2.30 மணிக்கு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தென்காசி இசக்கி மஹாலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இணைப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்காக தென்காசி இசக்கி மஹாலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மழை வந்தால் ஒழுகாதபடி சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தென்காசியில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகை புரியும் வழி நெடுக அ.தி.மு.க. கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    விழா முடிந்ததும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை செல்கிறார்கள்.

    இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக தென்காசி செல்லும் வழி நெடுகிலும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.

    விழா நடைபெறும் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×