search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஜாமீன் -தண்டனை நிறுத்தி வைப்பு

    தமிழக அரசு தொடர்ந்த தேச துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி தண்டனையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
    சென்னை:

    மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார்.

    இதையடுத்து வைகோவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி, வைகோவின் மனுவை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.

    Next Story
    ×