search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    சாத்தான்குளம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம்

    சாத்தான்குளம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகராஜ் தலைமையில் நடந்தது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகராஜ் தலைமையில் நடந்தது. ஒன்றிய பொதுச்செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் ஆதித்தன் வரவேற்றார். 

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட வக்கீல் பிரிவுத்தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் பெருமாள் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

    மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் விளக்கி சாத்தான்குளம் வட்டாரம் முழுவதும் பிரச்சாரம் செய்வது, ஒன்றிய அளவில் கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என கூட்டததில் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கபாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் பட்டும்பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ராஜலிங்கம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாய அணித்தலைவர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.
    Next Story
    ×