search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கே.வி.நல்லூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    கே.வி.நல்லூர் அருகே குடித்து விட்டு வந்ததை உறவினர்கள் சத்தம் போட்டதால் மனம் உடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    சங்கரன்கோவிலை அடுத்த கே.வி.நல்லூர் அருகே உள்ள வீரனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிராஜ் (வயது25). இவரது மனைவி மாரியம்மாள். தினசரி பேச்சிராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் உறவினர்கள் பேச்சிராஜை சத்தம் போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த பேச்சிராஜ் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கே.வி.நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×