search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி நிணைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்
    X
    கருணாநிதி நிணைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்

    கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

    தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு சென்றார். அங்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×