என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் ஆனந்தா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் முருகன் காயம் அடைந்தார். வலது தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் வேலைக்கு எதுவும் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது மகன்களிடம் பணம் பெற்று செலவு செய்து வந்தார்.
தொடர்ந்து மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பாத முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.