search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை வளாகத்தில் டிடிவி தினகரன் பேட்டியளித்த போது எடுத்த படம்.
    X
    சட்டசபை வளாகத்தில் டிடிவி தினகரன் பேட்டியளித்த போது எடுத்த படம்.

    பதவியை காப்பாற்றவே அதிமுகவில் சேருகிறார்கள்- டிடிவி தினகரன்

    பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் அதில் தவறு இல்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 4 நாட்களுக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டத்திற்கு வந்தார். 30 நிமிடம் சட்டசபை நிகழ்வுகளை கவனித்த அவர் பின்னர் புறப்பட்டு சென்றார்.

    சட்டசபைக்கு வெளியே டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை வசதி எதுவும் சரியாக செய்யப்படவில்லை. ஆளும் கட்சியை தோற்கடித்த தொகுதி என்பதால் அந்த தொகுதி மக்களை புறக்கணிக்கும் வகையில் திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள். தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட போது நாங்கள் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்த பிறகுதான் ஆளும் கட்சியினர் முறையாக வினியோகம் செய்கின்றனர்.

    எம்.பி. தேர்தல் முடிந்த பின்னர் அ.ம.மு.க. பதிவு செய்ய நிர்வாகிகள் கூட்டம் போடப்பட்டது. அப்போது நான், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் கையெழுத்து போட வேண்டாம். தனித்து செயல்படுங்கள் என்று சொன்னேன். அவர்கள் நலன் சார்ந்து தான் செயல்பட்டேன்.

    ஆனால் எதற்காக என் மீது குறை கூறுகிறார்கள்? யார் சொல்லி இப்போது இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். பதவியை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.விற்கு சென்று உள்ளனர். அது தவறு இல்லை.

    தேர்தல் தோல்விக்கு பிறகு சில நிர்வாகிகள் வேறு கட்சிக்கு போய் இருக்கிறார்கள். அப்படி போகும் போது எனக்கு எதிராக பேசுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் அ.ம.மு.க. வீழ்ச்சி அடைந்தது போன்ற பிம்பத்தை ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் உருவாக்க பார்க்கிறார்கள்.

    சசிகலா

    நிர்வாகிகளை வைத்து கட்சி இல்லை. ஒரு நிர்வாகி போனால் ஒரு இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடாது. சசிகலா இப்போது நடக்கிற நிகழ்வுகளை டி.வி.யின் மூலம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். அவர் பல தோல்விகளை சந்தித்தவர்தான். கட்சியை விட்டுசெல்பவர்கள் தங்கள் சுய காரணத்திற்காக செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×