search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தங்கம் விலை உயர்வு
    X
    தங்கம் விலை உயர்வு

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 உயர்வு

    தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.464 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 274-க்கு விற்பனை ஆனது.
    சென்னை :

    சமீபகாலமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 25-ந் தேதி தங்கம் விலை அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 303-க்கும், பவுன் ரூ.26 ஆயிரத்து 424-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தங்கம் விலை மீண்டும் ரூ.26 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 216-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 728-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்தநிலையில் தங்கம் விலை நேற்று ஒரேநாளில் அதிரடியாக உயர்ந்து மீண்டும் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.58-ம், பவுனுக்கு ரூ.464-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 274-க்கும், பவுன் ரூ.26 ஆயிரத்து 192-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை நிலவரம்

    தங்கத்தை போன்று வெள்ளி விலையிலும் நேற்று உயர்வு காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய் 40 காசுக்கும், கிலோ ரூ.40 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய் 70 காசுக்கும், கிலோ ரூ.40 ஆயிரத்து 700-க்கும் விற்கப்பட்டது.

    தங்கம் விலை உயர்வு குறித்து, சென்னை தங்க-வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறும்போது, ‘இஸ்ரேல் மீது சிரியா நடத்திய ஏவுகணை தாக்குதல், ஈரான்- அமெரிக்கா இடையே நிலவும் பனிப்போர் ஆகிய காரணங்களால் உலக சந்தையில் தங்கம் விலை நிலையற்ற தன்மையில் இருக்கிறது. வருகிற 10-ந் தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் தான் தங்கம் விலை இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×