search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டிராக்டரில் விற்பனை செய்யும் தண்ணீரை பிடிக்கும் பெண்கள்
    X
    டிராக்டரில் விற்பனை செய்யும் தண்ணீரை பிடிக்கும் பெண்கள்

    மீஞ்சூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய்க்கு விற்பனை

    மீஞ்சூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர், நெய்தவாயல், கொண்டக்கரை, மெதுர், கல்பாக்கம், திருவெள்ளவாயல், வெள்ளிவாயல் சாவடி, மீஞ்சூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் நிலத்தடி நீரும் உப்பாக மாறியதால் தண்ணீருக்காக கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

    அவர்கள் குடிப்பதற்கு குடிநீர் கேண்களை 30 ரூபாய்க்கும், குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்கு டிராக்டரில் வரும் தண்ணீரை 1 குடம் 7 ரூபாய்க்கும் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    லாரி மற்றும் டிராக்டரில் வரும் தண்ணீர் தனியார் போர்வெல், பம்புசெட்டில் இருந்து எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை பிடிக்க அதிகாலையே நாலூர் ஊராட்சி மீஞ்சூர் சாலையில் பெண்கள் வரிசையாக குடத்துடன் காத்துகிடக்கின்றனர்.

    இதனால் டிராக்டரில் குடிநீர் விற்பனை செய்பவர்கள் அதிகரித்துள்ளனர். மீஞ்சூர் பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரிப்பால் டிராக்டர் டேங்கர் தயாரிப்பு தொழிலும் இலவம் பேடு, கொடூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து நாலூர் கிராம மக்கள் கூறும்போது, ‘‘நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறியதால் இதனை குடிக்க பயன்படுத்த முடிய வில்லை. குளித்தால் உடம்பில் பிசுபிசுப்பு உள்ளது.

    இதுபற்றி ஊராட்சியில் எத்தனையோ முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. சாப்பாடு செய்ய பயன்படுத்தினால் மஞ்சள் நிறத்தில் உள்ளது.

    இதனால் தண்ணீரை அதிக காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

    Next Story
    ×