search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்கு
    X

    தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்கு

    தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் என்று வெற்றிவேல் கூறியுள்ளார்.

    தினகரன் மீது குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தங்க தமிழ்ச்செல்வன் பலமுறை தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை. 2009-ல் அவர் அம்மாவையே எதிர்த்து பேசியவர்தான். அவரை அம்மா கூப்பிட்டு எச்சரித்தார். இவர் திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல் படுவார். அவ்வப்போது அவரது மூடுக்கு ஏற்ப இருப்பார். இரவு வந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை. வேறுமாதிரி இருப்பார். ஆடியோவில் இருப்பது போல் தான் பேசுவார்.

    அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். அம்மா அறிவித்த மாவட்ட செயலாளராக இருந்து எங்கள் கூட வந்தவர். அவரிடம் நானே பலமுறை எச்சரிக்கை செய்து பேசியுள்ளேன். திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பேசினார். இதை யார் ஒத்துக்கொள்வார்கள். வீழ்த்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதை சொல்லலாமே. இப்படி பேசினால் எப்படி என்று அவரிடம் பேசினேன்.

    அதற்கு அவர் சரி நான் மாற்றி பேசுகிறேன் என்றார். இவர் ஒரு கருத்து சொல்வதோ அதை மாற்றிக்கொள்வதோ இயல்பு. அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் அதனால் தான்.

    ஓ.பன்னீர்செல்வத்தை தினகரன் பார்க்கும்போது தங்க தமிழ்செல்வனிடம் கேட்டு விட்டுத்தான் பார்த்தார். இதை ஏற்கனவே தங்க தமிழ்செல்வனே கூறி இருக்கிறார். இப்போது எப்படி மறந்துவிட்டார். தலைமையை விமர்சிக்கும் அளவுக்கு இவர் தகுதி படைத்தவர் கிடையாது. எங்கள் தலைமை மிகவும் சுதந்திரமாக செயல் படக்கூடியது. இவர் ஏதோ ஆதாயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இப்போது தேர்தல் முடிந்து விட்டதால் வேறு இடத்தில் துண்டு போட்டு ஆதாயத்தை தீர்த்துக்கொள்ள பார்க்கிறார்.

    தங்க தமிழ்செல்வன் மாவட்ட செயலாளராக இருந்து ஒரு கூட்டத்தை கூட்டினார். அப்படி கூட்டத்தை கூட்டுவது தவறு இல்லை. அங்கு அவர் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். அதை விட்டு விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேஸ்ட். நாம் போய் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடலாம் என்றெல்லாம் பேசினால் கட்சியில் இருப்பவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள். அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்க தமிழ்செல்வன் மீது புகார் செய்தனர்.

    அதையெல்லாம் கேட்டால் நான் அப்படி பேசவில்லை என்கிறார். நானே இதுபற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்ல வில்லை. அவர் பேசவில்லை என்றால் சத்தியம் செய்ய சொல்லுங்கள்.

    இப்போது ஜெயகுமார், ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பேசுகிறார். எதற்காக அது என்று தெரியவில்லை. அதில் இருந்தே அவருக்கு வேலை கொடுக்கப்பட்டு அதன்படி செயல்படுகிறார் என்று தெரிகிறது.

    தங்க தமிழ்செல்வன் கட்சியில் இருந்து வெளியில் செல்லத்தான் கூட்டத்தை கூட்டினார். அனால் அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவரிடன் செல்ல விரும்ப வில்லை. தங்க தமிழ்செல்வன் ஆட்டுவிக்கிப்படுகிறார். இவரும் ஆதாயத்துக்காக அதை செய்கிறார். அவர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இதை செய்யட்டும். இவரை யார் ஆட்டுவிக்கிறார்கள் என்பது எனக்கு 100 சதவீதம் தெரியும். 2 கட்சியில் இருந்து வந்து இவரைப்பார்த்து இருக்கிறார்கள். ஓட்டல் கேமரா காட்சிகளை எடுத்து பார்த்தால் அது தெரியும். அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது உண்மை. அந்த வேலையை எந்த கட்சி கொடுத்தது என்பதுதான் தெரியவில்லை.

    அவர் அமைதியாக இருப்பதாக சொல்லிக் கொள்கிறார். ஆனால் மனநோயாளி போலத்தான் இருக்கிரார். அவர் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×