search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன் தாயார் மரணம்
    X

    ஜி.கே.வாசன் தாயார் மரணம்

    தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனாரின் மனைவியும் மத்திய முன்னாள் மந்திரி ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் சென்னையில் இன்று காலமானார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மறைந்த ஜி.கே.மூப்பனார் மனைவி கஸ்தூரி அம்மாள் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் அவர் இன்று காலமானார்.



    அவரது உடலுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது. 
    Next Story
    ×