search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் வேலையில் நிலுவைத்தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
    X

    100 நாள் வேலையில் நிலுவைத்தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்

    பெரியபாளையம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்ககோரி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்ககோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்டச் செயலாளர் அருள் தலைமை தாங்கினார். தலைவர் குமார், பொருளாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாதர் சங்க மாவட்ட தலைவர் ரமா, இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கங்காதரன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, பத்மா, ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நிலுவைத் தொகையை கேட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வாசுகியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.வேலை கேட்கும் தொழிலாளர்களுக்கு புதிய அட்டையை வழங்க வேண்டும்.புதிய வேலையை உருவாக்க வேண்டும்” என்றனர்.
    Next Story
    ×