search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
    X

    டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் - அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    ராமநாதபுரம்:

    திருப்புல்லாணி யூனியன், தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளமோர்குளம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறுகையில், “குடிநீர் வழங்க இயலாத குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், திருப்புல்லாணி, நயினார்கோவில், பரமக்குடி, கடலாடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 45 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.” என்றார். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், உதவி செயற்பொறியாளர்கள் திருச்சி சண்முகநாதன், ஜவகர் கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்து கிருஷ்ணன், சுவடு பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×