search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்

    ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
    விருதுநகர்:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எர்ணாகுளம், வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்த மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

    இதேபோல வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இது கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம், கொண்டாரா, கொட்டாரக்கரா, அவனிஸ்வரம், புனலூர், தென்காசி, செங்கோட்டை, தென்காசி ராஜ பாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×