search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
    X

    எம்.ஜி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    பாலக்கோட்டில் எம்.ஜி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சென்னை:

    உயர்கல்வித் துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல வகை தொழில் நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் 176 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்.

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கு 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்.

    194 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை கட்டடங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா அரங்கம், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் அதிநவீன ஆவின் பாலகம்.


    கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டிடம் மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்கள்.

    தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பில் கோயம்புத்தூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 7 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற் பயிற்சி நிலையக் கட்டடங்கள், நாமக்கல், மதுரை, தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 3 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டம், கஞ்சிரங்காலில் 1 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகம்.

    ரூ.13 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மத்திய மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்- அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதா கிருஷ்ணன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, நிலோபர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×