search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- பாமக வேண்டுகோள்
    X

    கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- பாமக வேண்டுகோள்

    கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் செயலாளர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. தலைவர் ஜீவா முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் அம்ஜத்கான் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உள்ளாட்சி தேர்த லுக்கான ஆயத்த பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்க ளுக்கு மிகவும் இடையூறாக கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும்.

    பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட மக்கள் சங்கம் மற்றும் இளம் பெண்கள் சங்கம் சார்பில் மாநில கவிஞர் திலகபாமா தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அறிவழகன், ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் (மற்றும்) சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரும், கீழக்கரை நகரச் செயலாளருமான லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி., ராமேசுவரம் நகரச்செயலாளர் முருகன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சரவணன் முத்து மற்றும் மாணவர் சங்கம் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ஆயிஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×