search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச யோகா தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் யோகா
    X

    சர்வதேச யோகா தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் யோகா

    சர்வதேச யோகா தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.
    சாத்தூர்:

    விருதுநகர் ஹாஜி பீ செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் இப்ராகீம் தலைமையில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் யோகாசனங்களை செய்து காட்டினர். விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின நிகழ்ச்சியை பள்ளி சேர்மன் ஜெரால்டு ஞானரத்தினம், முதல்வர் டாக்டர் வெர்ஜின்இனிகோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

    விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் யோகா தின நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 175 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடந்தது. இதில் வேதாத்திரி மகரிஷியோகா மைய பயிற்சி ஆசிரியர் சித்ரா ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பத்மாவதி, விஜயராணி, ஜெயமேரி, முத்துஓவியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. விழாவை கல்லூரியின் தாளாளர் பழனிக்குரு ஆறுமுகம் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். இதைதொடர்ந்து மாணவி அஞ்சுதா லட்சுமி பத்மாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், திரிகோண ஆசனம் மற்றும் பிராணாயாமம் போன்றவற்றின் செயல்முறை விளக்கம் மற்றும் அதனுடைய பயன்களை எடுத்து கூறினார். இதில் மாணவிகளுக்கு அகஆற்றலை உணர்தல் என்ற அடிப்படையில் ஆசனப் பயிற்சி, தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினம் நடந்தது. பள்ளி தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை அங்காள ஈஸ்வரி வரவேற்றார். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினர். ேமலும் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். யோகாவின் தோற்றம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ேயாகா பயிற்சியாளர் ேபச்சிமுத்து விளக்கினார். முடிவில் ஆசிரியர் முத்துமகேஸ்வரி நன்றி கூறினார்.

    சாத்தூர் அருகே உள்ள எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமையில் நடந்தது. கல்லூரி மாணவ,மாணவிகள் சூரிய நமஸ்காரம் போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். அதற்கு பின் விரிவாக்கத் திட்ட முதன்மை அலுவலர் அருணேஷ் வரவேற்றார். சாத்தூர் மனவளக்கலை மன்ற ஆசிரியர் ராஜா சுடலைமுத்து யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகளை கூறினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் சிவஞானம் கலந்து கொண்டு யோகா பற்றிய கருத்துரையை வழங்கினார். யோகா பயிற்சி முறைகளை மாணவ,மாணவிகள் செய்வது குறித்து சாத்தூர் மனவளக்கலை மன்ற பேராசிரியர் சாராதாதேவி விளக்கினார். முடிவில் பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார். பேராசிரியர்கள் லதா, அனிதா, வெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில் மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனம் செய்தனர்.தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த யோகா தினவிழாவில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எஸ். குழுமத்தின் சேவா பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் தங்கபிரபு, தாளாளர் சிந்துஜா தங்கபிரபு முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நாகலட்சுமி, துணை முதல்வர் அமுதாமேரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×