search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே மினி சரக்கு வேன் மோதி 3 கல்லூரி மாணவர்கள் காயம்
    X

    தர்மபுரி அருகே மினி சரக்கு வேன் மோதி 3 கல்லூரி மாணவர்கள் காயம்

    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வேன் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த ஏலகிரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் அரவிந்த் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பழனி மகன் நவீன் (20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    தண்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த கோபால் மகன் விக்னேஷ் (19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்களான அரவிந்த், நவீன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் இன்று காலை ஏலகிரியில் இருந்து தர்மபுரிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை அரவிந்த் ஓட்டினார். அவர்கள் பை-பாஸ் சாலையில் உள்ள சேசம்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே கோழிகளை ஏற்றி வந்த மினிசரக்கு வேன் ஒன்று அரவிந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய மினிசரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அப்போது கோழிகளை ஏற்றி கொண்டு மினிசரக்கு வேன் சேசம்பட்டிக்கு செல்ல நல்லம்பள்ளியை சுற்றி 3 கி.மீ. தொலைவில் செல்ல வேண்டும் என்பதால் மினிவேனை பைபாஸ் சாலையில் குறுக்கே வந்து தவறான பாதையில் ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்தது. விபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×