search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அரசை கண்டித்து திருச்சியில் நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    அதிமுக அரசை கண்டித்து திருச்சியில் நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    குடிநீர் பிரச்சினைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி. மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    திருச்சி:

    குடிநீர் பிரச்சினைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி. மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும் குடிநீர் பிரச்சினைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியைத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்விகளை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டுமெனவும் வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலை மையிலும், வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலையிலும் நாளை (22-ந்தேதி, சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட, மாநகர, கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், செயல் வீரர்கள், கழக முன்னோடி கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×