search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- ஒரு சவரன் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது
    X

    புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- ஒரு சவரன் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 464 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.26 ஆயிரத்து 168 ஆக உள்ளது.
    சென்னை: 

    தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.26 ஆயிரத்து 168 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,271-க்கு விற்பனை ஆகிறது. 



    தங்கம் விலை நேற்று சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் ரூ.464 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×