search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மழை - இந்திய அளவில் டிரெண்டாக்கிய டுவிட்டர்வாசிகள்
    X

    சென்னையில் மழை - இந்திய அளவில் டிரெண்டாக்கிய டுவிட்டர்வாசிகள்

    சென்னையில் ஆறு மாதங்களுக்கு பிறகு மழை பெய்துள்ள நிலையில், டுவிட்டரில் சென்னைவாசிகள் இதை இந்திய அளவில் #Chennairains என டிரெண்டாக்கி உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்று மதியம் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
     
    இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.



    தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு (196 நாட்கள்) பிறகு சென்னையில் மழை பெய்துள்ளதால் மழை பொழிவின் காட்சிகளை  சென்னை மக்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இதையடுத்து, சமூக வலைத்தளமான டுவிட்டரில் #Chennairains என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. அதில் சென்னை மக்கள் மழை பொழியும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவேற்றி ஆரவாரம் செய்துள்ளனர்.
    Next Story
    ×