search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா
    X

    நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா

    நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
    நாகர்கோவில்:

    அகில இந்திய தபால் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் அமைப்பின் குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

    இதில் மாத இறுதிநாளில் ஓய்வூதியம் வழங்க முடியாதபடி இலாகா உருவாக்கியுள்ள செயற்கையான காலதாமதத்தை கண்டித்தும், இந்த தாமதம் இனிமேல் ஏற்படாவண்ணம் அதை சீர்செய்ய வேண்டும், தபால்காரர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள விகிதத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை 1-1-1996 முதல் மறு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். எழுத்தர்களின் பயிற்சி காலத்தை பணிக்காலமாக கணக்கிட்டு, ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    தர்ணா போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். முன்னாள் கோட்ட செயலாளர் தங்கப்பன் வரவேற்றார். செயலாளர் ராஜநாயகம் போராட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினார். ரெயில்வே ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜாண்சன், மத்திய- மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் ஐவின், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், ஆசிரியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய ஓய்வு பெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. 
    Next Story
    ×