search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் ஏடிஎம் கார்டு எண்கேட்டு ரூ.78 ஆயிரம் நூதன கொள்ளை
    X

    காவேரிப்பட்டணத்தில் ஏடிஎம் கார்டு எண்கேட்டு ரூ.78 ஆயிரம் நூதன கொள்ளை

    காவேரிப்பட்டணத்தில் ஏடிஎம் கார்டு எண்கேட்டு ரூ.78 ஆயிரம் நூதன கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அகரம் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் 73280-68210 என்ற செல்போன் எண்ணில் இருந்து இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 9-ந் தேதி ஒருவர் பேசிஉள்ளார். அப்போது அவர் நான் இந்தியன் வங்கி மேனேஜர் பேசுகிறேன். உங்கள் ஏ.டி.எம். கார்டு லாக் ஆகிவிட்டது. அதை சரிசெய்ய வேண்டும் எனக்கூறி, ஏ.டி.எம். கார்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவலையும் இவரிடம் இருந்து பெற்றுள்ளார்.

    இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 78,489-ஐ தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துவிட்டதாக இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து இந்தியன் வங்கிக்கு சென்று கூறியுள்ளார். அதுபோல் நாங்கள் யாரும் பேசவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மீண்டும் பேசியுள்ளார். எதிரில் பேசிய அந்த மர்மநபர், நாகராஜை மிரட்டியதுடன், ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார்.

    இதுகுறித்து நாகராஜ் நேற்று காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×