search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் தடை குறித்த ஆய்வு எப்போது?- மக்கள் எதிர்பார்ப்பு
    X

    திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் தடை குறித்த ஆய்வு எப்போது?- மக்கள் எதிர்பார்ப்பு

    திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் தடை குறித்த ஆய்வு எப்போது நடக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    ஆனால் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கடைகளில் தொடங்கி விட்டது. தற்போது பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    அதன்படி வீடுகள் மற்றும் சிறிய கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் முதல் தவணையாக ரூ.100, 2-வது தவணையாக ரூ.200, 3-வது தவணையாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதேபோல மளிகை, மருந்து கடை, துணிக்கடைகள் போன்றவற்றுக்கும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    திண்டுக்கல் நகரில் அரசு உத்தரவிற்கு பிறகு இன்னும் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லவில்லை. ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் கடையிலேயே பிளாஸ்டிக் பைக்கள் கிடைப்பதால் முன்பு பை எடுத்து சென்ற மக்கள் கூட தற்போது அதனை தவிர்த்து வருகின்றனர்.

    எனவே அதிகாரிகள் நகர் முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதித்தால்தான் இதனை முழுவதும் கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×