search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னூர் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது
    X

    அன்னூர் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது

    கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் கோவில் பாளையம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு போனது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் மேற்பார்வையில் அன்னூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், ஏட்டுகள் நாகராஜ், தாமோதரன், விசுவநாதன், கருணாகரன், சண்முகவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கரியாம்பாளையம் என்ற பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து அன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரை விசாரனை செய்ததில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பங்களா மேட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடந்து விசாரனை செய்ததில் அன்னூர், கோவில் பாளையம், அவினாசி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 12 இரு சக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த 12 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். பின்னர் கார்த்திகேயனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×