search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று மூடப்பட்டன
    X

    திருவள்ளூரில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று மூடப்பட்டன

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று மூடப்பட்டன. புதிய நோயாளிகள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
    திருவள்ளூர்:

    கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவாக இன்று டாக்டர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து அனைத்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களும் இன்று காலை 6 மணி முதல், நாளை காலை 6 மணி வரை வேலைக்கு செல்வது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். எனவே இன்று தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. அவை இன்று மூடப்பட்டன. புதிய நோயாளிகள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.

    அரசு டாக்டர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றாலும், டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு வந்தனர். எனவே, மருத்துவ பணிகள் வழக்கம் போல் நடந்தன.

    வெளிநோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரிகள் இயங்காததால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக அலைமோதியது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான மருத்துவ பாதுகாப்பு சட்டத்தையும், மருத்துவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×