search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் 20-ந்தேதி வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு
    X

    என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் 20-ந்தேதி வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

    என்ஜினீயரிங் படிப்புக்கான ரேங்க் பட்டியல் 20-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி, மே 2-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, கடந்த 3-ந் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.

    இதன்பின்பு, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 46 மையங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சரிபார்க்கப்பட்டது.



    ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு 6-ந் தேதி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 7-ந் தேதி தொடங்கியது.

    அதேபோன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்காக கூடுதலாக ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    46 மையங்களில் சரிபார்க்கப்பட்ட அனைத்து மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை உயர்மட்ட கண்காணிப்பு குழு சரிபார்க்க வேண்டியது உள்ளதால் உத்தேசமாக 17-ந் தேதி(அதாவது இன்று) வெளியிடப்படுவதாக இருந்த ரேங்க் பட்டியல் 20-ந் தேதி வெளியிடப்படும்.

    இந்த ரேங்க் பட்டியல் 4 நாட்கள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த பட்டியல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 044-22351014 அல்லது 044-22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×