search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார்: திருநாவுக்கரசர்
    X

    தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார்: திருநாவுக்கரசர்

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
    சென்னை :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவில் நாளை (இன்று) பங்கேற்கவில்லை. நாளை மறுநாள் (நாளை) பங்கேற்பேன். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை பேரிடர் பாதிப்பாக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே நிதி ஒதுக்கி மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்து இருக்கலாம்.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவர் தலைவராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை தொடர்ந்து வற்புறுத்துவோம்.

    3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக பேசக்கூடிய பலமான தலைவர் ராகுல்காந்தி தான். வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    2 முறை வெற்றி பெற்றாலே இந்தியாவை மோடிக்கு மக்கள் எழுதி தந்துவிட்டதாக கூற முடியாது. மக்கள் விரும்புகின்ற கட்சிக்கு தகுதியான தலைவர் ராகுல்காந்தி தான்.

    தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் என்றால் வேறு மாநிலத்தில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்ய முடியுமா?.

    இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்களது சொத்துக்களை விற்று விவசாய, கல்விக்கடன்களை அடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், ‘கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக இருந்த பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் தனது சொத்துக்களை விற்று கடன்களை அடைத்து முன்உதாரணமாக இருக்கட்டும்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×