என் மலர்

  செய்திகள்

  மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
  X

  மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் அருண் பாண்டி (வயது 18). அண்மையில் நடந்த முடிந்த பிளஸ்-2 தேர்வில் அருண் பாண்டி தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் மேற்கொண்டு படிக்க முயற்சிக்காமல் வேலை தேடினார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்க வில்லை.

  இதனால் விரக்தியில் இருந்த அருண்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (37). குடிப்பழகத்தால் இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கண்ணன், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை எஸ்.ஆலங்குளம் பாரதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (32). ஆட்டோ டிரைவரான இவர் கடன் பிரச்சினையில் சிக்கினார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகராஜன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  Next Story
  ×