என் மலர்

  செய்திகள்

  தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தி - அமைச்சர் செங்கோட்டையன்
  X

  தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தி - அமைச்சர் செங்கோட்டையன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது வதந்தியே என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  கோபிச்செட்டிப்பாளையம்:

  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான தகவல் தவறானது. சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்ப்பது குறித்து வரும் 17 ம் தேதி முதல் ஆலோசனை நடைபெற உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால், 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். 

  பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை பள்ளிகள் தீர்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×