என் மலர்
செய்திகள்

முசிறியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்- லாரி டிரைவர் கைது
முசிறி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
முசிறி
முசிறி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து முசிறி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ் மற்றும் அலுவலர்கள் முசிறி ஆற்று பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி சோளம் பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்பவர் லாரியில் மணல் ஏற்றி வந்தார். லாரியை மறித்து சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி தேவராஜிடம் தகராறு செய்து அவரை லாரிவை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இது குறித்து தேவராஜ் முசிறி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தார். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story