என் மலர்

  செய்திகள்

  ஈத்தாமொழி போலீஸ் நிலையம் அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
  X

  ஈத்தாமொழி போலீஸ் நிலையம் அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈத்தாமொழி போலீஸ் நிலையம் அருகே வாக்கிங் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

  நாகர்கோவில்:

  ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி காந்திமதி, (வயது 64). இவர், தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் காந்திமதி வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். ஈத்தாமொழி போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

  மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வாலிபர் ஒருவர் காந்திமதியின் அருகே சென்றார். திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோடி விட்டார்.

  காந்திமதி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

  காந்திமதியிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

  காந்திமதி தினமும் வாக்கிங் செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். எனவே கொள்ளையர்கள் அந்த பகுதியைச்சேர்ந்தவர்களா? இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இது குறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராமையாபிள்ளை. இவரது மனைவி பெருமாள்பிள்ளை. (வயது 82) இவர் வீட்டின் பக்கத்தில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் பெருமாள் பிள்ளை கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார்.

  இது குறித்து பூதப்பாண்டி போலீசில் அவரது மகன் குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பெருமாள்பிள்ளையின் இன்னொரு மகன் ஈஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×