என் மலர்
செய்திகள்

திருவையாறு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த சிறுவன் பலி
திருவையாறு அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியானான்.
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அணைகுடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் தரணிதரன் (வயது 7). செம்மங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலுக்கு தரணிதரன் சென்றான். அங்கு வயலில் மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தது. அப்போது விளையாட்டாக அறுந்து கிடந்த கம்பியை சிறுவன் பிடித்தான்.
இதில் திடீரென மின்சாரம் பாய்ந்து தரணிதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானான். இதுகுறித்து திருவையாறு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story