search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தது ஏன்?- ராதா ரவி பேட்டி

    அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ராதா ரவி தன்னுடைய அரசியல் பயணத்தை தி.மு.கவில் தொடங்கினார். அதன்பின் அ.தி.மு.கவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, என் தாய்வீடு தி.மு.கதான் என்கிற முழக்கத்தோடு தி.மு.கவில் இணைந்தார். தற்போது மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்திருக்கிறார்.

    சினிமா விழாவில் நயன்தாராவை பற்றி நான் தவறாக எதுவும் கூறவில்லை.

    இருந்தாலும் அவர் மனம் நோகும்படி கருத்து கூறி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூட தெரிவித்துவிட்டேன். நான் இவ்வளவு பெருந்தன்மையாக கூறியும் கூட தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வருகிறது. என்னை நிரந்தரமாகவே நீக்கிவிடுங்கள் என்று கூறிவிட்டேன்.

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் அணியை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறேன். ஆனால் ராதாரவி சொல்பவருக்கு ஆதரவாக பணியாற்றக் கூடாது. அப்படி பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவோம் என்று தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து சொல்லி இருக்கிறார்கள்.

    அதனால் என்னை தி.மு.க.வில் இருந்து மொத்தமாக ஒதுக்கி விட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்பித்தான் அதில் இணைந்தேன். உண்மையில் தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது. அது யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

    இனி தி.மு.க. எனக்கு சரிப்பட்டுவராது என்று நடிகர் சங்கத்தேர்தலில் தெரிந்துகொண்டேன். அதனால்தான் அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×