என் மலர்

  செய்திகள்

  அரவக்குறிச்சியில் திண்ணையில் அமர்ந்து முக ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, குறைகளை கேட்டறிந்தார்.
  X
  அரவக்குறிச்சியில் திண்ணையில் அமர்ந்து முக ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, குறைகளை கேட்டறிந்தார்.

  திமுக கூட்டணி எம்பி, எம்எல்ஏக்கள் மக்களை நாடி வந்து பிரச்சனையை தீர்ப்பார்கள்- மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  அரவக்குறிச்சி:

  கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு கோவையில் இருந்து கார் மூலம் கரூர் வந்தார்.

  மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

  இன்று காலை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சிக்கு சென்றார். காலை 7.30 மணிக்கு புங்கம்பாடி பிரிவு ரோட்டில் திரண்டிருந்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

  தொடர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், அரசு வேலை காலியாக உள்ளதா, என்ன தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது? என்பது கூட தெரியாமல் இருக்கிறோம். எனவே அரவக்குறிச்சி பகுதியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்றனர்.

  மேலும் அரவக்குறிச்சி நகர் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

  இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.தான் வெற்றி பெறப்போகிறது. அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

  கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியையும், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியையும் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்று ஓட்டு கேட்டு வந்தோம், இன்று நன்றி தெரிவிக்க வந்துள்ளோம்.

  தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் யாரும் தேடிச்செல்ல வேண்டாம். அவர்களே உங்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பார்கள் என்றார்.

  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி சார்பில் 14 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் திருமண நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


  இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு பள்ளப்பட்டி ராஜாப்பேட்டை பகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சார்பில் 14 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் திருமண நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையத்தையும் அவர் திறந்துவைத்தார்.

  பின்னர் நகர தி.மு.க. அலுவலகம் அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலினிடம், நகர தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது கோரிக்கை மனு அளித்தார். அதில் மரவாப்பாளையம் குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டி பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் மின்தடை காலங்களில் மேலும் தாமதம் ஆகிறது என்றார்.

  பள்ளப்பட்டி உரூஸ் மைதானத்தின் பின்புறம் நறு காஞ்சி ஆறு தடுப்பணையில் தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை படித்த மு.க.ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  அப்போது பொதுமக்கள் வருங்கால முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர் பவித்ரம் ஜெயந்தி நகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

  அவருடன் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, ஜோதிமணி எம்.பி., மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில செயலாளர் பரணிமணி மற்றும் பலர் சென்றனர்.
  Next Story
  ×