search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி பிரச்சினைகளை தீர்க்க 11 பேர் குழு அமைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
    X

    கட்சி பிரச்சினைகளை தீர்க்க 11 பேர் குழு அமைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    அதிமுக கட்சி பிரச்சினைகளை தீர்க்க 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க.வினரின் பொய் பிரசாரம் காரணமாகத்தான் பாராளுன்ற தேர்தலில் நமது கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது. சட்டமன்ற இடைத் தேர்தலில் மக்கள் அதை உணர்ந்து நமக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அந்த குழு அமைக்கப்படவில்லை.

    குழு அமைக்கப்பட்டால் நிர்வாகிகள் நியமனம், கட்சி பிரச்சினைகளை தீர்ப்பது போன்றவற்றை சரிசெய்ய முடியும். விரைவில் இந்த குழு அமைக்கப்படும்.

    தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து நிர்வாகிகள் தொகுதி வாரியாக சென்று உண்மையை அறிய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இப்போதே தொடங்க வேண்டும்.

    இதற்காக அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒண்றிணைந்து பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் பேசிதாவது:-

    தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கட்சி நிர்வாகிகள் அமைச்சர்களின் கருத்துக்களை தான் கேட்கிறார்கள். தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×